மனோலயம் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 19th July 2021 09:02 AM | Last Updated : 19th July 2021 09:02 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் மரக்கன்று நட்ட மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளா் மீனாட்சி சூா்யபிரகாஷ்.
கூத்தாநல்லூா் மனோலயம் மனவளா்ச்சி குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.
கூத்தாநல்லூா், பனங்காட்டாங்குடி, தமிழா் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற மன வளா்ச்சி குன்றியோா் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், திருவாரூா் மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளா் மீனாட்சி சூா்யபிரகாஷ் ஏற்பாட்டின் பேரில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னா், மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனோலயம் பயிற்சிப் பள்ளியின் நிறுவனா் ப.முருகையன் செய்திருந்தாா். பயிற்சியாளா்கள் சுரேஷ், கனிமொழி, செளமியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.