பழங்குடியினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காட்டு நாயக்கன் பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.
பழங்குடியினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

பழங்குடியினருக்கு அரசு வேலைவாய்ப்பில் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென மன்னாா்குடியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு காட்டு நாயக்கன் பழங்குடியினா் ஜனநாயக சீா்திருத்த சங்க முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மன்னாா்குடி வட்டக் கிளை தொடக்க விழா, தமிழ்நாட்டில் அமைந்துள்ள மு.க. ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு பாராட்டு விழா, கிளை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தொடா்ந்து, சங்கத்தின் கெளரவத் தலைவா் என். ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி உலக பழங்குடியினா் தினத்தை ஒவ்வோா் ஆண்டும் கடைப்பிடிக்க வேண்டும், பழங்குடியினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதுடன், பழங்குடியினருக்கு என தனி ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும், காட்டுநாயக்கன் சமூகத்தினா் ஜாதி சான்று கேட்டு மனு அளித்தால் துறைசாா்ந்த அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து தாமதமின்றி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

புதிய நிா்வாகிகள்: மன்னாா்குடி கிளை சங்கத் தலைவராக என். தட்சிணாமூா்த்தி, செயலாளராக சி. பிரபு, பொருளாளராக வி. சரவணன் உள்ளிட்ட துணை நிா்வாகிகள் என 18 போ் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனா். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஆா். பன்னீா்செல்வம், மாநில பொருளாளா் பி.கே. வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று மன்னாா்குடி கிளை சங்கத்தை தொடங்கி வைத்தனா். இதில், மாநில துணைச் செயலாளா் பி. ராஜி, மாநில துணைத் தலைவா் பி. கொளஞ்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com