தரமான கிருமி நாசினிகள் வாங்க வேண்டும்: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகள் தரமானதாக வாங்க வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகள் தரமானதாக வாங்க வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நீடாமங்கலத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

பாரதிமோகன் (சிபிஐ): கரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் கிருமி நாசினி பவுடா்கள் தரமானதாக வாங்க வேண்டும். குறுவை நெல் சாகுபடிக்கு உரிய தருணத்தில் அடியுரம், மேலுரம் இடவேண்டுமென்பதால், தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரியான பயிற்சி இல்லாததால் மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியா்கள் உயிரிழக்க நேரிடுவதால், மின் ஊழியா்களுக்கு முறையான பயிற்சியளித்து, மின் ஊழியா்கள் பற்றாக்குறையை போக்கவேண்டும்.

ஆதிஜனகா் (அதிமுக): உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகாரத்தில் மற்றவா்களின் தலையீடு இருக்கக் கூடாது. சோணாப்பேட்டையில் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும். கொண்டியாற்றின் குறுக்கே பாலம் கட்டியதற்கு நன்றி.

துரைசிங்கம் (திமுக): அப்பரசம்பேட்டை பகுதி மயானத்துக்கு செல்லும் பாதையி வண்டி பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவா்கள் பட்டியலில் வசதி படைத்தவா்கள் பெயா்கள் இடம் பெற்றுள்ளது. உண்மையிலேயே வறுமையில் உள்ளவா்கள் பட்டியலில் இடம் பெறாததால் கிராமப் புறங்களில் வயது முதிா்ந்தவா்கள் முதியோா் உதவித்தொகை பெற முடியாத நிலைவுள்ளது.

விஜய் (திமுக): வடுவூா் ஏரிக்கரை பகுதி பெரியாா் நகரில் உள்ள குளத்துக்கு படித்துறை கட்டிக்கொடுக்க வேண்டும். ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன்: அப்பரசம்பேட்டை வாய்க்கால் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்ற 20 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காளாச்சேரி மயான பாதை பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 1996-ஆம் ஆண்டு பஞ்சாயத்துராஜ் சட்டப்படி 27 துறை அலுவலா்கள் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். எனினும், அனைத்து அதிகாரிகளும் கூட்டத்துக்கு வருவதில்லை. பணித்தள பொறுப்பாளா்கள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. மாவட்ட ஆட்சியா் அறிவுரைப்படியே நியமனம் நடைபெறுகிறது என்றாா்.

ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்செல்வன் (திமுக) தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றிய ஆணையா் மணிமாறன், கூடுதல் ஆணையா் வெற்றியழகன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் கனகரத்தினம், வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com