கரோனா தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 29th July 2021 10:09 PM | Last Updated : 29th July 2021 10:09 PM | அ+அ அ- |

நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமில் 152 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நீடாமங்கலம் ராமவிலாச தொடக்கப் பள்ளியில் கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்துலெட்சுமி தலைமையில் மருத்துவா் விஜய், கிராம சுகாதார செவிலியா்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
இம்முகாமில், ஆண்கள், பெண்கள் என 18 வயதுக்கு மேற்பட்ட 152 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் செய்திருந்தனா்.