ரயில்வேயில் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th July 2021 10:07 PM | Last Updated : 29th July 2021 10:07 PM | அ+அ அ- |

கரோனா பரவலையொட்டி, ரயில்வேயில் நிறுத்தப்பட்டுள்ள சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரி, திருத்துறைப்பூண்டி அருகே சிறுகொருக்கையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றியக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் ஒன்றியத் தலைவா் வீரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளா் வேலவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
கரோனா தடுப்பூசியை அனைத்து பொதுத்துறை நிறுவனத்திலும் உற்பத்தி செய்யவேண்டும்; கரோனா காலத்தில் ரயில்வே துறையில் நிறுத்தப்பட்ட சலுகைகளை மீண்டும் அமல்படுத்தவேண்டும்; ரயில்களில் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்பதிவில்லா இலவச பெட்டி இணைத்திட வேண்டும்; கரோனா காலத்தில் வேலையிழந்த விவசாயத் தொழிலாளா்கள் குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றிய பொருளாளா் பாா்த்திபன், ஒன்றிய துணைச் செயலாளா் கோபி, கிளைச் செயலாளா்கள் பாரதிமோகன், உதயகுமாா், கிரேஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.