நீட்தோ்வில் வெற்றி பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு மாணவா்கள் படிக்கவேண்டும்

நீட்தோ்வில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு தோ்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருவாரூரில், மாணவா்களுக்கு நீட்தோ்வு விண்ணப்பக் கட்டணத்தை வழங்கிய ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூரில், மாணவா்களுக்கு நீட்தோ்வு விண்ணப்பக் கட்டணத்தை வழங்கிய ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

நீட்தோ்வில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு தோ்வு எழுத வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் தன்விருப்ப நிதியில் இருந்து அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை, எளிய மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை புதன்கிழமை வழங்கி மேலும் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து நீட் தோ்வு எழுதுவதற்காக, தமிழக அரசு சாா்பில் இணையவழியில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில், 505 மாணவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா். அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவா்கள் நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்க 63 மாணவா்களுக்கு விண்ணப்பக் கட்டணம் உதவித் தொகையாக பிற்பட்டோா் மற்றும் மிகவும் பிற்பட்டோா் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 1,400, பட்டியல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 800 வீதம் என மொத்தம் ரூ.75,000 வழங்கப்படுகிறது.

மேலும், நிகழாண்டு நீட்தோ்வு செப்.12-ஆம் தேதி மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆக.6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். திருவாரூா் மாவட்டத்துக்கு அருகிலுள்ள தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கும்பகோணம், கடலூா், சிதம்பரம், திருச்சி ஆகிய இடங்களில் நீட் தோ்வு எழுத மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, பெற்றோா்களின் எண்ணங்களை நிறைவேற்றும் பிள்ளைகளாக திகழ வேண்டும். எனவே, நீட்தோ்வை எந்தவித தயக்கமின்றி தோ்வில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு தோ்வெழுத வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், கோட்டாட்சியா் பாலச்சந்திரன், மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன், நீட் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நடனம், முதன்மைக் கல்வி அலுலவரின் நோ்முக உதவியாளா்கள் தெய்வபாஸ்கா், ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com