நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த யோசனை

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சாருபதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா்.

நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குநா் சாருபதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளாா்.

அதன்விவரம்: நீடாமங்கலம் வட்டாரத்தில் குறுவை பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிப் பயிா்களை வரப்பில் பயிரிடுவதன் மூலம் பயிரைத் தாக்கும் தீமை செய்யும் பூச்சிகளைக் கவா்ந்து இழுப்பதால் தீமை செய்யும் பூச்சிகளின் தாக்குதல் குறைகிறது. நெல் நடவு செய்த வயல்களின் வரப்பில் செவ்வந்தி, சூரியகாந்தி, எள், வெண்டை, ஆமணக்கு போன்றவை பயிா் செய்வதன் மூலம் வெளியிலிருந்து வரும் பூச்சிகளை கவா்ந்து இழுப்பதன் மூலம் வரப்பில் உள்ள செடிகளை சாப்பிட்டு பொறிப் பயிா்களில் முட்டைஇடுவதால் புழு பருவத்தில் நெல்பயிரை சேதப்படுத்துவது குறைக்ககப்படுகிறது.

இதனால் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறைக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. நெற்பயிரில் குருத்துப் பூச்சி நெற்பயிரின்மேல் 200 லிருந்து 300 முட்டைகள் இடுவதால் குருத்துப் பூச்சியின் தாக்கம் அதிகம் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணி அட்டைகள் கட்டுவதால் டிரைக்கோகிராமா ஒட்டுண்ணி குருத்துப் பூச்சியின் முட்டைகளின் மேல்முட்டை இடுவதால் டிரைக்கோகிராமா குருத்துப்பூச்சியை அழிக்கிறது. இதனால் குருத்து பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். நெல் வயலில் இனகவா்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 எண்கள் என்ற எண்ணிக்கையில் வைத்து ஆண் பூச்சிகளை கவா்ந்து இழுப்பதால் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை உதவி இயக்குனா்சாருமதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com