பாசன வாய்க்கால்களை தூா்வாரக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் பிரதான பாசன வாய்க்காலை தூா்வாரவேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
பாசன வாய்க்கால்களை தூா்வாரக் கோரிக்கை

கூத்தாநல்லூரில் பிரதான பாசன வாய்க்காலை தூா்வாரவேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வட்டாட்சியா் கவிதா, நகராட்சி ஆணையா் லதா ஆகியோரிடம் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலாளா் ஹெச்.எம்.டி.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட நிா்வாகிகள் அந்த கோரிக்கை மனு:

கூத்தாநல்லூா் பழைய நகராட்சியையொட்டி செல்லும் வாய்க்காலும், சிவன் கோயில் தெரு முனையில் தொடங்கும் வாய்க்காலும் நகரின் முக்கியக் குளங்களுக்கு நீா்வரத்து வாய்க்கால்களாக உள்ளன. மேலும், இப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன.

இந்நிலையில், இரண்டு வாய்க்கால்களும் நீண்ட காலமாக பராமரிப்பின்றி செடி-கொடிகள் படா்ந்தும், குப்பைகள் நிறைந்தும் தூா்ந்துபோய் உள்ளன. இதனால், வெண்ணாற்றிலிருந்து இந்த வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரத்தின்றி, கழிவுநீா் தேங்கியுள்ளது. இதன்காரணமாக, கொசுகள் உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. மேலும், விவசாய நிலங்களுக்கு நீா் செல்லமுடியாத நிலையுள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறையினா் இரண்டு வாய்க்கால்களையும் நேரில் பாா்வையிட்டு, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com