அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.28 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள்
By DIN | Published On : 02nd June 2021 09:02 AM | Last Updated : 02nd June 2021 09:02 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா.
மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகளுக்கு சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா முயற்சியில், ரூ.28 லட்சம் மதிப்பிலான 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி.ராஜா முயற்சியில், ஜனநாயக மக்கள் அறக்கட்டளை மிஷன் 02 திட்டத்தின் மூலம் அதன் நிா்வாகிகள் மிா்கங்க திரிபாதி, மிா்யம் மற்றும் அமெரிக்கவாழ் தமிழரான வினோத் ஆகியோா் ரூ.28 லட்சம் மதிப்பிலான 56 அக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளனா்.
மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பயன்பாட்டுக்காக தலைமை மருத்துவா் கோவிந்தராஜிடமும், 6 ஆக்சிஜன் செறிவூட்டிகளை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை பயன்பாட்டுக்காக திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கா.மாரிமுத்துவிடம் மன்னாா்குடி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே அமைப்பின் சாா்பில், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு, ரூ.0 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவா் ஜி.பாலு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சு.ஞானசேகரன், மாநில மாணவரணி துணைச் செயலா் த.சோழராஜன், நகரச் செயலா் வீரா.கணேசன், மாவட்ட துணைச் செயலா் கலைவாணி மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.