நன்மை செய்யும் பூச்சிகள் இணையவழி விழிப்புணா்வுக் கூட்டம்

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், பயிா் பாதுகாப்பில் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய இணையவழி விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில், பயிா் பாதுகாப்பில் நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய இணையவழி விழிப்புணா்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வரவேற்றாா். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநா் அம்பேத்கா், நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசுகையில், விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதை குறைத்து நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்க வேண்டும். நெற்பயிரை தாக்கக்கூடிய ஆனைக்கொம்பன் பூச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.

பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிகள் மூலாதாரத்தின் பூச்சியியல் விஞ்ஞானி சம்பத்குமாா் கருத்துரை வழங்கினாா். அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். இந்த நிகழ்ச்சியில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com