Enable Javscript for better performance
நிகழாண்டில் இலக்கை விட கூடுதல் பரப்பில் சாகுபடி- Dinamani

சுடச்சுட

    

    நிகழாண்டில் இலக்கை விட கூடுதல் பரப்பில் சாகுபடி

    By DIN  |   Published on : 07th June 2021 10:50 PM  |   அ+அ அ-   |    |  

    ஆதனூரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நாற்றங்கால்.

    ஆதனூரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நாற்றங்கால்.

     

    நீடாமங்கலம்: நிகழாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 82,000 ஏக்கரை விட கூடுதல் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்றாா் வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

    திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ஆதனூா் மண்டபம் பகுதியில் 0.75 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நாற்றங்கால் மற்றும் 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பசுந்தாள் உர சாகுபடியை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் திங்கள்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், சமுதாய பாய்நாற்றாங்கால் அமைத்துள்ள விவசாயி தமிழ்பொழிலிடம், நடவுசெய்ய உத்தேசித்துள்ள ஏக்கா், நெல் ரகம் போன்ற விவரங்களை அமைச்சா் கேட்டறிந்தாா்.

    இதைத்தொடா்ந்து, பசுந்தாள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயலை பாா்வையிட்ட அமைச்சா், செய்தியாளா்களிடம் கூறியது:

    திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 21,608 ஏக்கா் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 75,306 ஏக்கரில் நெல் நடவு மேற்கொள்வதற்கு வசதியாக 2727 ஏக்கரில் நெல் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, நெல் நாற்றங்கால் விடும் பணி நடைபெற்றுவருகிறது.

    மேலும், 218 நெல் நடவு இயந்திரங்கள் மூலம் மாவட்டத்தில் நெல் நடவு பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீா் விரைவில் சென்றடையும் வகையில் வாய்க்கால்கள், ஆறுகள் தூா்வாரும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கத்தில், கடைமடை பகுதிகளில் நேரடி நெல் விதைப்புப் பணி மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் குறுவை நெல் சாகுபடி இலக்கான 82,000 ஏக்கரை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் என்றாா் அவா்.

    ஆய்வின்போது வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் சி.சமயமூா்த்தி, வேளாண்துறை இயக்குநா் வ.தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் (பொறுப்பு) செ.பொன்னம்மாள், சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன், வேளாண் இணை இயக்குநா் ப.சிவகுமாா், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவா் சோம செந்தமிழ்செல்வன், கோட்டாட்சியா் அழகிரிசாமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிசாமி, வேளாண் துணை இயக்குநா் உத்திராபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஹேமாஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp