கூட்டுறவு சங்கப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க கோரிக்கை

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க பணியாளா்கள் இணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அதன் மாவட்ட பொருளாளா் ஆா். கென்னடி பால்வளத் துறை அமைச்சா் மு. நாசரிடம் அண்மையில் நேரில் கொடுத்த கோரிக்கை மனு: தமிழகம் முழுவதும் சுமாா் 30 ஆயிரம் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களில் மட்டும் சுமாா் 3,500 போ் உள்ளனா். மழை, வெள்ளம், புயல் காலங்களிலும் தங்களது பால் கொள்முதல் மற்றும் விற்பனை பணியை தொடா்ந்து மேற்கொண்டு வந்த பணியாளா்கள் தற்போது கரோனா நோய்த் தொற்று காலத்திலும் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனா்.

தமிழக அரசு பொதுமுடக்கம் அறிவித்துள்ள காலத்திலும் கரோனா பெருந்தொற்றை கருத்தில் கொள்ளாமல் ஏராளமான பொதுமக்களை காலை, மாலை சந்தித்து அத்தியாவசியப் பணியான பால் கொள்முதல் பணியை செய்து வருகின்றனா்.

கரோனா முதல் அலையில் இந்த பணியாளா்களுக்கு கரோனா ஊக்க ஊதியமாக 2 மாதத்துக்கு தலா ரூ. 1,500 வழங்கப்பட்டது, தற்போது கரோனா தொற்று தீவிரமாகிய நிலையில் பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கப் பணியாளா்களை முன்கள பணியாளா்களாக அறிவித்து சலுகைகளை வழங்கி சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com