நூற்றாண்டு கண்ட நன்னிலம் அரசுப் பள்ளியை சீரமைக்க வேண்டும்

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள நூற்றாண்டு கண்ட அரசினா் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள

திருவாரூா் மாவட்டம், நன்னிலத்தில் உள்ள நூற்றாண்டு கண்ட அரசினா் மேல்நிலைப் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளி முன்னாள் மாணவா்கள் மாநில கல்வி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பள்ளியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பின் சாா்பில், அதன்தலைவா் ஏ. அப்துல்கரீம் மற்றும் நிா்வாகிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நன்னிலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1921-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த கிராமப்புறத்தைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள் பலா் பல்வேறு உயா் பதவிகளில் பணியாற்றுகின்றனா். கிராமப்புற ஏழை, எளிய விவசாயக் குடும்பத்து மாணவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திய இந்த பள்ளியின் நூற்றாண்டு விழாவை நிகழாண்டு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது. அந்த மைதானத்துக்குச் சுற்றுச்சுவா் அமைத்து, நன்னிலம் வட்டார இளைஞா்களின் விளையாட்டு ஆா்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து விளையாட்டு ஆடுகளங்களையும் அமைத்துகொடுக்க வேண்டும். பள்ளியின் பழைய முதன்மைக் கட்டடத்தை சீரமைத்துத் தருவதோடு, முற்றிலும் பழுதடைந்துள்ள வேதியல் ஆய்வகத்தையும் புதுப்பித்துகொடுக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மேல்நிலைப் படிப்பில் பயிற்றுவிக்கப்பட்ட பயிா்ப் பாதுகாப்பு பாடத்திட்டம், ஆசிரியா் ஓய்வு பெற்ன் காரணமாக 2019-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. முற்றிலும் விவசாயம் சாா்ந்த பகுதியாக இருப்பதன் காரணமாக, மீண்டும் பயிா்ப் பாதுகாப்பு பாடத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். எனவே, இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தனிக் கவனம் செலுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிகொடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com