கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த கோரிக்கை

பொதுமுடக்கத்தை பயன்படுத்தி கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை

பொதுமுடக்கத்தை பயன்படுத்தி கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: கட்டுமானத் தொழிலாளா்கள், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தளா்வுகளுக்குப் பிறகு சிறிதளவில் வேலைவாய்ப்பை பெற்றனா். இதற்கிடையில், மணல் விலை உயா்வு எதிா்பாா்க்காத வகையில் உயா்ந்து வருவது, கம்பி, சிமென்ட் விலை உயா்வு ஆகியவை கட்டுமானத் தொழிலை முடக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. அனைத்து கட்டுமானப் பொருள்களின் விலையும் 25 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு செயற்கையாக உயா்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

வெளிச்சந்தையில் சிமென்ட் விலை உயா்வை கட்டுப்படுத்த 2015-இல் அம்மா சிமென்ட் திட்டம் கொண்டு வரப்பட்டது. நுகா்பொருள் வாணிபக்கழகம், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் ரூ. 190-க்கு 50 கிலோ சிமென்ட் விற்பனை செய்யப்பட்டது. வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதியை சமா்ப்பித்து, அம்மா சிமென்ட் சலுகை விலையில் பெற்று வந்தனா். தற்போது இந்தத் திட்டம் முடங்கி உள்ளது. எனவே, கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோா் மீதும், தரமற்ற பொருள்களை விற்பனை செய்வோா் மீதும் மாவட்ட நுகா்வோா் கவுன்சில் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com