கூத்தாநல்லூர்: கரோனா தொற்று கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு

கூத்தாநல்லூர் நகரத்தில் கரோனா தொற்றை கண்டறிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் கரோனா தொற்று கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு.
கூத்தாநல்லூரில் கரோனா தொற்று கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகரத்தில் கரோனா தொற்றை கண்டறிய 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
கரோனா தொற்றைக் கண்டறிய கூத்தாநல்லூர் நகர மக்களிடத்தில் காய்ச்சல் உள்ளதா, ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கிறதா என கண்டறிய, 24 வார்டுகளையும் கண்காணிக்க, கணக்கெடுக்க 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி, ஆணையர் லதா கூறியது:  கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, அங்குள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா, ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

நகராட்சி பணியாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள 8 குழுவிற்கும், ஒரு குழுவிற்கு இருவர் எனவும், ஒரு குழு 3 வார்டுகளை கவனிக்கும் படி, 8 குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும், ஒரு சென்சார் தெர்மா மீட்டர், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், ஒரு கிருமி நாசினி மற்றும் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆக்ஸிஜன் அளவு பார்க்கும் போது, ஒவ்வொருவருக்கும் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு வரக்கூடிய, நகராட்சி பணியாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என ஆணையர் தெரிவித்தார். முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில், 8 குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனைக்கான கருவிகளை ஆணையர் லதா வழங்கினார். நிகழ்வில், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார், நகராட்சி மேலாளர் எஸ்.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com