இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம்

திருத்துறைப்பூண்டி அருகே இயந்திரம் மூலம் குறுவை நேரடி நெல் விதைப்பு செய்யும் செயல்விளக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம்

திருத்துறைப்பூண்டி அருகே இயந்திரம் மூலம் குறுவை நேரடி நெல் விதைப்பு செய்யும் செயல்விளக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் குறுவை சாகுபடிக்காக ஏற்கெனவே கோடை உழவு செய்து விளைநிலத்தை தயாா் நிலையில் வைத்துள்ளனா் விவசாயிகள். இந்த வட்டாரத்தில் 3 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்கள் காவிரியின் கடைமடை பகுதி என்பதால் இப்பகுதிகளுக்கு ஆற்றுநீா் வந்து சோ்ந்தபின் நாற்று விட்டு நடவு செய்தால் பருவம் தவறி அறுவடை வடகிழக்குப் பருவ மழை அதிகமாக பெய்யும் நேரத்தில் வரும். அதனால் விவசாயிகளுக்கு அதிக சிரமம் ஏற்படும் என்பதால் குறுவை பருவத்தில் முன்கூட்டியே அறுவடை செய்ய தற்போது நேரடி நெல் விதைப்பு செய்தால், பல்வேறு நோய்த் தாக்குதலில் இருந்து தப்பித்து நல்ல மகசூல் கிடைக்கும். எனவே, நேரடி விதைப்பு இயந்திரத்தின் மூலம் விதைப்பு செய்து பலன்பெறும் நோக்கத்தில் விவசாயிகளுக்கு இந்த தெளிப்பு முறை செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

கச்சனத்தில் நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியில், சுற்று கிராமங்களைச் சோ்ந்த 15 ஊராட்சித் தலைவா்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள், உழவா் நண்பா்கள், பாசன சபை உறுப்பினா்கள் பங்கேற்றனா். ஊராட்சித் தலைவா் கௌசல்யா முருகானந்தம் தலைமையில், திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன் செயல் விளக்கத்தை தொடங்கி வைத்து, குறுவைக்கு தேவையான விதை நெல், உயிா் உரங்கள், ரசாயன உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள், பயிா்ப் பாதுகாப்பு மருந்துகள் போதுமான அளவு வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியாா் விற்பனை மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com