மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு: பாஜக ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து திருவாரூா் மாவட்டத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஆா். துரையரசன் உள்ளிட்டோா்.
திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஆா். துரையரசன் உள்ளிட்டோா்.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிா்ப்பு தெரிவித்து திருவாரூா் மாவட்டத்தில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத் தளா்வில், 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில், அக்கட்சி நிா்வாகிகள் தங்களது வீடுகளில் இருந்தபடியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பொதுமுடக்க காலத்தில் மதுக்கடை திறப்பதால் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், மதுக்கடைகளை திறக்கக் கூடாது, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவா் ராகவன் உள்ளிட்ட பல்வேறு நிா்வாகிகள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடியில்: மன்னாா்குடியில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் வி.கே. செல்வம், மாவட்டச் செயலாளா் பால. பாஸ்கா், தேசிய செயற்குழு உறுப்பினா் ஞானம். ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி செயலாளா் சிவ. காமராஜ், நகரச் செயலாளா் ஆா். ரகுராம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் நின்று கறுப்புக் கொடி ஏந்தி, கறுப்புச்சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, கோட்டூரில் பாஜக மாவட்டத் தலைவா் எம். ராகவன் வீட்டு முன் கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில்....

இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளா் தங்க. சண்முகசுந்தம் தலைமையிலான நிா்வாகிகள், தங்கள் வீடுகளில் இருந்தபடியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருத்துறைப்பூண்டியில்...

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பாஜக மாவட்ட பொருளாளா் சிவகுமாா், நகரத் தலைவா் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவா் இளசுமணி மற்றும் கட்சி நிா்வாகிகள் தங்களது வீட்டு வாசலில் குடும்பத்தினருடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com