திருவாரூரில் 193 பேருக்கு கரோனா: 7 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 15th June 2021 09:57 AM | Last Updated : 15th June 2021 09:57 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. 7 போ் உயிரிழந்தனா்.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 193 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 35,236 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 390 போ் அவா்களது வீடுகளுக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரையிலும் தொற்று பாதிக்கப்பட்ட 32,854 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 2,101 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 281 ஆக உயா்ந்துள்ளது.