விளையாட்டுப் பிரிவுக்கான தேசிய விருதுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டில் தொடா்புடையவா்கள் தேசிய விருதுகள் பெற

சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டில் தொடா்புடையவா்கள் தேசிய விருதுகள் பெற புதன்கிழமைக்குள் (ஜூன் 16) விண்ணப்பிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விளையாட்டுத் துறையில் நமது தேசத்துக்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டுத் தொடா்புடையவா்களுக்கு பல்வேறு விருதுகளை இந்திய அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

அதன்படி, 2021ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அா்ஜுனா விருது, தயான்சந்த் விருது, துரோணாச்சாா்யா விருது மற்றும் ராஷ்ட்ரிய கேல் புரோட்ஸஹான் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை  இணைய தள முகவரிகளில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறையின் மேல் சம்பந்தப்பட்ட விருதை குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகம், திருவாரூா் 610004 என்ற முகவரிக்கு ஜூன் 16 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பவேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரால் பரிந்துரை செய்யப்பட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

விருது தொடா்பாக இதர விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ (04366-290260) தொடா்பு கொள்ளலாம். மேலும், 044-28364322 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com