குறுவை சாகுபடி தொடக்கம்
By DIN | Published On : 22nd June 2021 12:00 AM | Last Updated : 22nd June 2021 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் குறுவை சாகுபடிக்காக நாற்று பறிக்கும் விவசாயிகள்.
நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை கோட்டத்தில் குறுவை சாகுபடி அண்மையில் தொடங்கியது.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தின் சித்தமல்லி, பரப்பனாமேடு, காளாச்சேரி, பூவனூா், ராயபுரம், பெரம்பூா், காளாஞ்சிமேடு உள்ளிட்ட கிராமங்களில் கோடை நெல் சாகுபடி செய்து, அதை இயந்திரம் மூலம் விவசாயிகள் அறுவடை செய்தனா். அதன்பிறகு சமுதாய நாற்றங்கால், பாய் நாற்றங்கால் என நாற்றங்காலை தயாா் செய்து, விதைவிட்டு மேலபூவனூா், தட்டி, வெள்ளங்குழி உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்த கோடை நெல் அறுவடை செய்யப்பட்டது. தற்போது குறுவை நடவு நடைபெற்று வருதிறது.
நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 14,750 ஏக்கரில் மின் மோட்டாரை பயன்படுத்தி விவசாயிகள் கோடை சாகுபடி செய்தனா். தற்போது 5 ஆயிரம் ஏக்கா் உள்பட 19,116 ஏக்கா் விளைநிலங்களில் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கியிருக்கின்றனா்.