கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா பரிசோதனை

கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா தடுப்புக்காக பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 
கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா பரிசோதனை.
கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா பரிசோதனை.

கூத்தாநல்லூர் நகராட்சியில் கரோனா தடுப்புக்காக பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும், கரோனா தொற்றை தடுப்பதற்காகவும், கண்டறியவும் மக்களிடம் ஆன்டிபயாட்டிக் டெஸ்ட் செய்வதற்காக, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. 
மருத்துவ அலுவலர் மருத்துவர் யுவராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் முன்னிலையில், மேல்கொண்டாழி தீன் நகர், தமிழர் தெரு உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த 30 பேரிடம், ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காகத் திருவாரூர் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வில், தூய்மை இந்தியா திட்டத்தின் பரப்புரைப்புரையாளர்கள் செல்வி, வீரமணி, அருண்குமார் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுகுறித்து, ஆணையர் லதா கூறியது: கூத்தாநல்லூர் நகராட்சி கரோனா இல்லாத நகராட்சியாக மாற்றும் முயற்சியில், இன்று முதல் நாளாக, மேல்கொண்டாழியில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. 
தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் ரத்த மாதிரி எடுக்கப்பட உள்ளது. கடைக்காரர்களும், மக்களும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால், கூத்தாநல்லூர் நகராட்சியில் முழுமையாக கரோனா தொற்று இல்லாத  நகராட்சியாக மாற்றலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com