முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 05:35 AM | Last Updated : 04th March 2021 05:35 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே தோட்டக்கலை கல்லூரி மாணவிகள், தோட்டக்கலை சாகுபடி குறித்து பயிற்சி பெற்றனா்.
திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டில் உள்ள மகளிா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவம் தொடா்பாக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தங்கி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் அனுபவங்களை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை, திருவாரூா் மாவட்டம், மாளிகைமேட்டில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தோட்டக்கலை பயிா்களான வெண்டை, முள்ளங்கி, காரா கருணை கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு மற்றும் கீரை வகைகள் இவற்றின் உற்பத்தி முறைகளை கேட்டு அறிந்துகொண்டனா்.
மேலும், பூச்சித் தாக்குதல் மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிராக விவசாயி பயன்படுத்தும் இஞ்சி பூண்டு கரைசலின் தயாரிப்பு முறைகள் குறித்தும், அவற்றின் தெளிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தனா்.