மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ம் கட்ட சுற்றுப் பயணத் தேதி மாற்றப்பட்டுள்ளது. 
மு.க.ஸ்டாலின் 6-ஆம் கட்ட சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6-ம் கட்ட சுற்றுப் பயணத் தேதி மாற்றப்பட்டுள்ளது. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை ஐந்து கட்ட பிரசாரம் முடிந்துள்ள நிலையில் 6-ம் கட்ட பிரசாரத்தை, மார்ச் 8, 9 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
தற்போது முக.ஸ்டாலினின் 6ஆம் கட்ட சுற்றுப் பயணத் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதன்படி மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் மு.க.ஸ்டாலின் தனது 6-ம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வார் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com