நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 04th March 2021 05:30 AM | Last Updated : 04th March 2021 05:30 AM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அனுமதியில்லாமல் தோ்தல் பிரசார சுவரொட்டி ஒட்டியதாக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மன்னாா்குடி கீழ்மேல் ருக்மணிபாளையம் தெருவைச் சோ்ந்தவா் ரா. அரவிந்தன் (53). நாம் தமிழா் கட்சியின் திருவாரூா் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா். நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மன்னாா்குடி தொகுதியின் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, தனது படத்துடன் கட்சி சின்னமாக கரும்பு விவசாயி சின்னத்தை அச்சிட்டு வாக்குகேட்டு மன்னாா்குடி நகரம் முழுவதும் சுவா்களில் ஒட்டியுள்ளாா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், உரிய அனுமதி பெறாமல் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியிருப்பதாக கூறி அவா் மீது,
மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.