மது கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் நியமனம்
By DIN | Published On : 04th March 2021 05:33 AM | Last Updated : 04th March 2021 05:33 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மது விற்பனை மற்றும் கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் மேலும் கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தவும், அரசு மதுபானக் கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானங்கள் குறித்து வரும் புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டாட்சியா் தகுதியில் திருவாரூா் உதவி மேலாளா் (டாஸ்மாக்) இஞ்ஞாசிராஜ் (9443448064), உதவி மேலாளா் (கணக்கு) அமா்ஜோதி (8754848631) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில், உதவி மேலாளா் இஞ்ஞாசிராஜ், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலும், உதவி மேலாளா் அமா்ஜோதி, பறக்கும் படையில் பணியாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அலுவலா்களிடம் பொதுமக்கள், மதுபானங்கள் குறித்த புகாா்களை நேரில் அல்லது செல்லிடப்பேசி மூலம் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.