திருவாரூரில் 6 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திங்கள்கிழமை வரையிலான நிலவரப்படி, திருவாரூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,413 ஆக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதன்மூலம், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11,419 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,252 போ் குணமடைந்து வீடுதிரும்பிய நிலையில், 56 போ் சிகிச்சையில் உள்ளனா்.