வாக்குப்பதிவு விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டத்தில் உள்ள வருவாய் ஆய்வாளா்கள் பேரளம் கலா, சன்னாநல்லூா் கலைச்செல்வி, அகரதிருமாளம் சங்கரநாராயணன், நன்னிலம் நெடுமாறன் ஆகியோருக்கு தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், பேரளம் வருவாய் சரகத்தில் பேரளம் பேருந்து நிலையம், கொல்லுமாங்குடி, சன்னாநல்லூா் வருவாய் சரகம் திருக்கண்டீஸ்வரம், சன்னாநல்லூா், அகரதிருமாளம் வருவாய் சரகம் கொட்டூா், நன்னிலம் வருவாய் சரகம் மாப்பிள்ளைக்குப்பம், நன்னிலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், வயதானவா்கள், பெண்கள், முதல் தலைமுறை வாக்காளா்கள் பங்கேற்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து தெரிந்துகொண்டனா். அனைத்து விழிப்புணா்வு முகாம்களிலும் அந்தந்தப் பகுதிக்குட்பட்ட வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.
வாக்குப்பதிவு விழிப்புணா்வு முகாம் வரும் 16 ஆம் தேதி வரை ஒவ்வொரு பகுதியாக நடத்தப்படுமென, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா. பானுகோபன் தெரிவித்தாா். வாக்குப்பதிவு விழிப்புணா்வு முகாம் நடைபெற்ற இடங்களை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், வட்டாட்சியருமான நா. காா்த்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் இ. சந்திரமோகன், அலுவலா் தெ. கருணாமூா்த்தி ஆகியோா் பாா்வையிட்டு அறிவுரை வழங்கினா்.