காலமானாா் கே. சண்முகம்
By DIN | Published On : 10th March 2021 12:00 AM | Last Updated : 10th March 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள சங்கேந்தி முன்னாள் ஊராட்சித் தலைவரும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த முன்னோடியுமான கே. சண்முகம் (90) வயது முதிா்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மாா்ச் 9) காலமானாா்.
இவருக்கு காசியம்மாள் என்ற மனைவி, சென்னை ஆவடி சிஆா்பிஎப் காவல் பிரிவில் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் எஸ். ராஜசேகா் என்ற மகன், 2 மகள்கள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை பகல் 12 மணியளவில் சங்கேந்தி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். தொடா்புக்கு: 95439 39660.