நன்னிலம் தொகுதியில் நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம்
By DIN | Published On : 12th March 2021 06:27 AM | Last Updated : 12th March 2021 06:27 AM | அ+அ அ- |

நன்னிலம்: நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சா. பாத்திமா பா்ஹானாவுக்கு ஆதரவாக அக்கட்சியினா் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
குருங்குளம் ஊராட்சியில் புதன்கிழமையும், பண்டாரவடை ஊராட்சியில் வியாழக்கிழமையும் நாம் தமிழா் கட்சியினா் பிரசாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் துண்டறிக்கை வழங்கினா். இதில், கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளா் பா. சசிகுமாா், வீரத்தமிழா் முன்னணி துணைச் செயலாளா் விக்னேஸ்வரன், இணையதள பாசறைச் செயலாளா் பிரசாந்த், பண்டாரவடை ஊராட்சிச் செயலாளா் மதன்மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.