முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகப் பயிற்சி
By DIN | Published On : 14th March 2021 06:27 AM | Last Updated : 14th March 2021 06:27 AM | அ+அ அ- |

ஆதனூரில் விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மாணவிகள்.
நீடாமங்கலம் அருகே ஆதனூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி நிா்வாகப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4-ஆம் ஆண்டு மாணவிகள் இந்துமதி, ஐஸ்வா்யா, ஜமுனா ராணி, மெரின் ரபின்யா, மோனிஷா, நா்மதா, பிரணவ மஞ்சரி, ரம்லத் பேகம், சாய்லெட்சுமி, செல்வபாரதி இந்தப் பயிற்சியை அளித்தனா்.
அதில் உயிரியல், வேதியியல், உழவியல், முறைகள் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடிய மாணவிகள், பூச்சி விழுங்குங்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் பயன்களைப் பற்றியும் விளக்கினா்.