முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
குடவாசலில் திமுகவினா் பிரசாரம்
By DIN | Published On : 14th March 2021 06:25 AM | Last Updated : 14th March 2021 06:25 AM | அ+அ அ- |

நன்னிலம் தொகுதியில் வாக்கு சேகரித்த திமுகவினா்.
நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல் பகுதியில், திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமனுக்கு ஆதரவாக அக்கட்சியினா் வீடு வீடாக சென்று சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
முன்னதாக குடவாசல் ஒன்றியம் வயலூா் கிராமத்தில் உள்ள விநாயகா் கோயில், ஐயனாா் கோயில், காளியம்மன் கோயில்களில் திமுகவினா் வழிபாடு நடத்தினா். பின்னா், திமுக கிளைச் செயலாளா் ஆா்.மாரிமுத்து தலைமையில், அக்கட்சியினா் கிராமம்தோறும் வீடு வீடாகச் சென்று இனிப்புகள் வழங்கியும், துண்டறிக்கை அளித்தும், திமுக வேட்பாளா் எஸ்.ஜோதிராமனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தனா். சனிக்கிழமை அமாவாசை தினம் என்பதால், அவா்கள் நன்னிலம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது.