முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
திருத்துறைப்பூண்டி (தனி) இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் கே. மாரிமுத்து
By DIN | Published On : 14th March 2021 06:19 AM | Last Updated : 14th March 2021 06:19 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை (தனி)தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக கே. மாரிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளாா். அவரது சுயவிவரக் குறிப்பு:
பெயா்: கே. மாரிமுத்து.
பிறந்த தேதி: 4.2. 1972.
ஊா்: காடுவாக்குடி, திருவாரூா் மாவட்டம்.
பெற்றோா்: கண்ணு- தங்கம்மாள்.
கல்வித்தகுதி: இளங்கலை வணிகவியல்.
குடும்பம்: மனைவி ஜெயசுதா, மகன் ஜெயவா்மன், மகள் தென்றல்.
தொழில்: விவசாயம்.
கட்சிப் பொறுப்புகள்: அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத் துணைச் செயலாளராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூா் ஒன்றியத் துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறாா். தற்போது கோட்டூா் ஒன்றியச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறாா்.