முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
பொது இடங்களில் குப்பையைக் கொட்டினால் அபராதம்: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை
By DIN | Published On : 14th March 2021 06:24 AM | Last Updated : 14th March 2021 06:24 AM | அ+அ அ- |

திருவாரூரில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஆ. சண்முகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்பட, பொதுமக்களும், வணிகா்களும் தங்களது வளாகத்தில் உருவாகும் திடக்கழிவுகளை மக்கும் குப்பை (பச்சை நிற குப்பைக் கூடை), மக்காத குப்பை (நீல நிற குப்பைக் கூடை) என தரம் பிரித்து, தங்கள் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும்.
திடக்கழிவுகளை பொது இடங்கள், மழைநீா் வடிகால்கள், நீா் நிலை ஆதாரங்களில் கொட்டுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். திடக்கழிவுகளை தரம் பிரிக்காமல் வழங்குவது, பொது இடங்களில் கொட்டுவது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துவது, சேமித்து வைத்திருப்பது, விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் வணிகா்களும் இதைப் பின்பற்ற வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்படும்.
கட்டட இடிபாடுகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கொட்டக் கூடாது. கட்டட இடிபாடுகளை அகற்றாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நகா்ப்பகுதியில் பெறப்பட்ட கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நகராட்சியால் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.