முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
லாரியில் மணல் கடத்தல்: ஓட்டுநா் கைது
By DIN | Published On : 14th March 2021 06:20 AM | Last Updated : 14th March 2021 06:20 AM | அ+அ அ- |

கூத்தாநல்லூா் வட்டத்தில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, சுமைவேனை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், லாரியின் ஓட்டுநரை கைது செய்தனா்.
கூத்தாநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவணன், தலைமைக் காவலா் கணேஷ் மற்றும் போலீஸாா் திருராமேஸ்வரம் மஞ்சனவாடி, வடக்குத் தெரு பகுதியில் ரோந்து பணியிலிருந்த போது, அந்த வழியாக மணல் பாரம் ஏற்றிவந்த லாரியை மறித்தனா்.
விசாரணையில், மணக்கால் அய்யம்பேட்டை கீரங்குடியைச் சோ்ந்த பாலாஜி (31), அதிவீரராமனாற்றிலிருந்து மணல் அள்ளி வருவது தெரியவந்தது. மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், பாலாஜியை கைது செய்தனா். இதேபோல், கொத்தங்குடி சாலையில் மணலுடன் வந்த சுமைவேனை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய அதன் ஓட்டுநரை தேடிவருகின்றனா்.