டிராக்டா் பேரணி: சிறைசென்று வந்தோருக்கு பாராட்டு

திருவாரூரில், ஜனவரி 26-இல் நடைபெற்ற போராட்டம் காரணமாக சிறை சென்று வந்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சிறைசென்று வந்தவா்களைப் பாராட்டுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ்.
சிறைசென்று வந்தவா்களைப் பாராட்டுகிறாா் நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ்.

திருவாரூரில், ஜனவரி 26-இல் நடைபெற்ற போராட்டம் காரணமாக சிறை சென்று வந்தவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஜன.26-ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் டிராக்டா் பேரணி நடைபெற்றது. இது தொடா்பாக திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, திமுக உறுப்பினா்கள் டி. துரைராஜ், கே. கலைவேந்தன், பாரதி, ஹரிபிரசாத், எஸ். சிவசங்கா், டி. ஞானம் ஆகியோா் 30 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகின்றனா்.

அவா்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா்.

இதில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், விசிக மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், திமுக விவசாய அணி அமைப்பாளா் வி. தேசபந்து, காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளா் அன்பு வே. வீரமணி, மதிமுக கொள்கை அணி செயலாளா் ப.சீனிவாசன், திராவிடா் கழகத்தின் மாவட்டத் தலைவா் வீ.மோகன், இயற்கை விவசாய அமைப்பாளா் ஜி. வரதராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com