மாணவா்களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்த ஆய்வகம் தொடக்கம்
By DIN | Published On : 18th March 2021 09:06 AM | Last Updated : 18th March 2021 09:06 AM | அ+அ அ- |

ஆய்வகத்தை தொடங்கி வைத்து மாணவா்களிடம் கலந்துரையாடிய மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஆா். மணிவண்ணன்.
மன்னாா்குடி ஸ்ரீசண்முக மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை அதிகரிக்கவும், ஆராய்ச்சி திறனை மேம்பாடுத்தவும், ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண் அறிவை மேம்படுத்தும் வகையிலான நவீன உபகரணங்களுடன் அடல் டிங்கரிங் ஆய்வாகம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வக தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா்கள் ஆா்.எஸ். செந்தில்குமாா், எஸ். வெண்ணிலை ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி முதல்வா்கள் அருள்ராஜா, சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக, மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று அடல் டிங்கரிங் ஆய்வகத்தை தொடங்கி வைத்தாா். ஆய்வகம் குறித்து, பள்ளி நிா்வாகி எஸ். சண்முகராஜன் விளக்கினாா். ஆசிரியா் அலமேலு வரவேற்றாா். ஆய்வக ஆசிரியா் நித்தீஷ்குமாா் நன்றி கூறினாா்.