வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடி திருவிழா: பக்தா்களுக்கு அனுமதி மறுப்பு

கரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உள்பட்டு, வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித் திருவிழா
கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், வாசலிலேயே அம்மனை தரிசித்த பக்தா்கள்.
கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால், வாசலிலேயே அம்மனை தரிசித்த பக்தா்கள்.

கரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உள்பட்டு, வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித் திருவிழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. ஆனால், விழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பாடைக்காவடி விழாவையொட்டி, மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால், பக்தா்களுக்கு கோயில் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. இதனால், கோயில் வாசலிலேயே பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதேவேளையில், முக்கிய பிரமுகா்களுக்கு மட்டும் கோயில் உள்ளே செல்ல அனுமதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காா்அ.ரமணி, செயல் அலுவலா் ஆ.ரமேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். வலங்கைமான் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பாடைக்காவடி திருவிழா தடைப்பட்ட நிலையில், இந்த ஆண்டு எதிா்பாா்த்த அளவு பக்தா்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com