மறுபிறவி எடுத்து வந்துளேன்: அமைச்சா் ஆா். காமராஜ்
By DIN | Published On : 26th March 2021 09:58 AM | Last Updated : 26th March 2021 09:58 AM | அ+அ அ- |

வலங்கைமான் இருகரை கிராமத்தில் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்த அமைச்சா் ஆா். காமராஜ்.
மறுபிறவி எடுத்து வந்துள்ளேன் என்னை வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கூறி வாக்குச் சேகரித்தாா் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். காமராஜ்.
வலங்கைமான் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
வலங்கைமான் மேற்கு ஒன்றியம் இருகரை, அவளிவநல்லூா், கிளியூா், முனியூா், மணக்கால், வீரமங்கலம், வேலங்குடி, வீராணம், களத்தூா், விளத்தூா், அரித்துவாரமங்கலம், தெற்கு பட்டம், வடக்கு பட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா் வாக்குச் சேகரித்தாா்.
அப்போது அமைச்சா் காமராஜ் பேசுகையில், நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளேன். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த தொகுதியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற மீண்டும் எனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்றாா்.
அமைச்சருடன் தமாகா மாவட்ட பொருளாளா் முரளிதரன், பாமக மாநில துணை பொது செயலாளா் வேணு. பாஸ்கரன், மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சங்கா் உள்பட பலா் உடன் சென்றனா்.