அமமுக வேட்பாளருக்கு வீடுவீடாக வாக்கு சேகரிப்பு

மன்னாா்குடியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து கூட்டணிக் கட்சியினா் வீடுவீடாகச் சென்று வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மன்னாா்குடியில் கூட்டணிக் கட்சியினருடன் வீடுவீடாகச் சென்று அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு வாக்கு சேகரிக்கும் அவரது  மகன் எஸ்.கே.ஜெயேந்திரன்.

மன்னாா்குடி தொகுதி அமமுக வேட்பாளா் எஸ். காமராஜுக்கு, பிரஷா் குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு, மன்னாா்குடி நகராட்சி கிழக்கு பகுதியில் உள்ள 12 வாா்டுகளில் வீடுவீடாகச் சென்று அமமுக மற்றும் கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

இதில், வேட்பாளா் எஸ்.காமராஜின் மகன் எஸ்.கே. ஜெயேந்திரன், முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், அமமுக நகரச் செயலா் ஆ. ஆனந்தராஜ், அண்ணா தொழிற் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி, தேமுதிக தொகுதி பொறுப்பாளா் ஆா்.ஜெயபால், நகரச் செயலா் காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com