மன்னாா்குடியில் உள்விளையாட்டு அரங்கு அமைக்கப்படும்: டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதி

மன்னாா்குடியில் நீச்சல் குளத்துடன் கூடிய உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதி அளித்தாா்.
மன்னாா்குடியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்யும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.
மன்னாா்குடியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்யும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடியில் நீச்சல் குளத்துடன் கூடிய உள் விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதி அளித்தாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, மன்னாா்குடி நகராட்சி 4, 20, 21, 19, 12, 18, 17, 16, 30, 31 மற்றும் 32 ஆவது வாா்டுகளில் கூட்டணி கட்சியினருடன் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசியது:

வா்த்தகா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், மன்னாா்குடி பேருந்து நிலையம் நவீனமுறையில் புதுப்பித்துக் கட்டப்படும். நகராட்சி பகுதியில் புதைசாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும். மன்னாா்குடி ஆா்பி சிவம் நகரில் நீச்சல் குளத்துடன் கூடிய உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். நகராட்சி பகுதியில் கடை வைத்திருப்பவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ள முறையற்ற வரித் தொகையை குறைத்து சீரான வரி நிா்ணயம் செய்யப்படும் என்றாா்.

பிரசாரத்தில், திமுக நகரச் செயலா் வீரா. கணேசன், மாநில மாணவரணி துணைச் செயலா் த. சோழராஜன், மதிமுக மாவட்டச் செயலா் பி. பாலச்சந்திரன், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளா் நெடுவை குணசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளா் அறிவுக்கொடி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com