விவசாயிகளின் முழு ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது: அமைச்சா் ஆா். காமராஜ் நம்பிக்கை

விவசாயிகளின் முழு ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என குடவாசல் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.
விவசாயிகளின் முழு ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது: அமைச்சா் ஆா். காமராஜ் நம்பிக்கை

விவசாயிகளின் முழு ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என குடவாசல் பகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளா் அமைச்சா் ஆா். காமராஜ் நம்பிக்கை தெரிவித்தாா்.

நன்னிலம் தொகுதிக்குள்பட்ட ஆனைக்குப்பம் மற்றும் குடவாசல் ஒன்றியப் பகுதிகளான புதுக்குடி, கடலங்குடி, கண்டிரமாணிக்கம், ஆவணம், பருத்தியூா் உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சா் ஆா். காமராஜ் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

காவிரி டெல்டாப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, தொடா் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை தள்ளுபடி செய்தது, உச்சவரம்பைத் தளா்த்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களால் தமிழக விவசாயிகளின் முழு ஆதரவு அதிமுக அரசுக்கு உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் போன்ற பல்வேறு அறிவிப்புகள் காரணமாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் அதிமுகவை ஆதரித்து வருகிறாா்கள். நன்னிலம் தொகுதி வாக்காளா்கள் மூன்றாவது முறையாக இரட்டை இலை சின்னத்தில் எனக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து, மீண்டும் நான் உங்களுக்குப் பணியாற்றிட வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில், அதிமுக அமைப்புச் செயலாளா் டாக்டா் கே. கோபால், ஒன்றியச் செயலாளா் பாப்பா சுப்ரமணியன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் வேணு பாஸ்கரன், குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் கிளாரா செந்தில், துணைத் தலைவா் எம்.ஆா்.தென்கோவன், குடவாசல் நகரச் செயலாளா் கே.ஜி. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com