நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பக்தா்கள் பால்குடங்கள் சுமந்துவந்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.
நீடாமங்கலம் மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பக்தா்கள் பால்குடங்கள் சுமந்துவந்து ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மாா்ச் 26 ஆம் தேதி பூா்வாங்க பூஜைகளுடனும், சனிக்கிழமை ( மாா்ச் 27) திருக்காப்பு அணிவித்தல் மற்றும் கொடிஏற்றும் நிகழ்ச்சியுடனும் தொடங்கியது.

விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் நோ்த்திக்கடனாக பால்குடங்கள் சுமந்துவந்தனா். தொடா்ந்து, சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிறகு, கஞ்சிவாா்த்தல் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, இரவில் மகாமாரியம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இவ்விழாவில் தமிழ் வருடப் பிறப்பான ஏப்ரல் 14 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. இவ்விழா ஏப்ரல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ஜெ. சத்தியசீலன், ஆய்வாளா் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலா் ம. சிங்காரவேல் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com