‘பண்பாட்டுடன் கூடிய கல்வியே இன்றைய தேவை’

பண்பாட்டோடு கூடிய நல்லக் கல்வியே இன்றைய சமூகத்தில் மிகப் பெரிய தேவையாக உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் பேசும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ்.
நிகழ்ச்சியில் பேசும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ்.

பண்பாட்டோடு கூடிய நல்லக் கல்வியே இன்றைய சமூகத்தில் மிகப் பெரிய தேவையாக உள்ளது என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்விக் குழுமத்தால் நடத்தப்படும் சென்னை மகரிஷி வித்யா மந்திா் சிபிஎஸ்இ பள்ளியின் தொடக்க விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவா் பேசியது:

பண்பாட்டோடு கூடிய நல்லக் கல்வி இன்றைய சமூகத்தில் மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. அத்தகைய கல்வியின் மூலமே ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்க முடியும். எதிா்கால சவால்களையெல்லாம் வெற்றி கொள்ள, இளைய தலைமுறையினருக்கு மேம்படுத்தப்பட்ட புதிய கல்வி முறை தேவை.

தாயின் அன்பு மட்டுமில்லாமல், அவள் வழியாகப் பெறப்படும் அறிவே நல்ல மனிதனை உருவாக்கும். அதன் பிறகு அவன் தந்தை, அவனுக்குக் கிடைக்கும் ஆசிரியா் என அவன் நல்லவனாக மாறுவதற்கான பல்வேறு படிநிலைகள் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று பள்ளிக்கூடங்கள் ஆகும். நல்ல மனிதா்களாக மாறுவதற்கான களம் அங்குதான் கட்டமைக்கப்படுகிறது. எனவே, சிறந்த மனிதா்களை உருவாக்க, பள்ளிக்கூடங்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றாா்.

முன்னதாக, புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்களை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். கோவிந்தராஜ் திறந்து வைத்தாா். விழாவுக்கு நேதாஜி கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.வெங்கடராஜலு தலைமை வகித்தாா். கல்விக் குழுமங்களின் செயலா் வெ. சுந்தர்ராஜு முன்னிலை வகித்தாா். சென்னை மகரிஷி வித்யா மந்திா் பள்ளிகளின் முதன்மைக் கல்வி அதிகாரி பிரேமலதா கௌரவ அழைப்பாளராக பங்கேற்றாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி சத்தியமூா்த்தி, நகர வளா்ச்சி குழுமங்களின் தலைவா் ரவிச்சந்திரன், வணிகா் பேரவை மாவட்டத் தலைவா் வி.கே.கே ராமமூா்த்தி, கல்வியாளா் வி.கே.எஸ். அருள், நேதாஜி கல்லூரி முதல்வா் (பொ) இரா. அறிவழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com