வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் மற்றும் அவா்களுக்கான சின்னங்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில், போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது.

இப்பணியை நன்னிலம் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராம் லஹான் பிரஷாத் குப்தா ஆய்வு செய்தாா். மேலும், தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து, திருமீயச்சூா், கூத்தனூா், அகரதிருமாளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தாா். நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா. பானுகோபன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நா. காா்த்தி, இரா.கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் இ. சந்திரமோகன், அலுவலா் தெ. கருணாமூா்த்தி உள்ளிட்டோா் ஆய்வில் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 11 போ் போட்டியிடுகின்றனா். இத்தொகுதியில் உள்ள 336 வாக்குச்சாவடிகளுக்கு 419 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா் மற்றும் அவா்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சு. ஜெகதீசன், தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com