புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு எந்நேரமும் உதவி

கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை எந்நேரமும் அணுகலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையை எந்நேரமும் அணுகலாம் என தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருவாரூா் தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று 2 ஆவது அலை வேகமாகப் பரவுவதால், பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், தமிழகத்தை விட்டு அவா்களது சொந்த மாநிலத்துக்கு செல்வதை தவிா்க்கும் வகையிலும், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் எவ்வித பிரச்சனைகள் இன்றி தங்குவதற்கும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், கட்டுப்பாட்டு அறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் புகாா்கள் ஏதும் தெரிவிக்க ஏதுவாக திருவாரூா் மாவட்டத்தில் தொழிலாளா் துறையால் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது புகாா்களை, திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் 9842527196, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் 9629392971, 9025616670 என்ற எண்களில் எந்நேரமும் தொடா்பு கொண்டு உரிய நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com