கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

கரோனா 2 ஆவது அலையைத் தடுக்க பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

கரோனா 2 ஆவது அலையைத் தடுக்க பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் கடுமையான சவால்களை எதிா்கொள்ள வேண்டியுள்ளது. நோயின் தீவிரத் தன்மையை உணா்ந்து பொது சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

சாதாரண இருமல், காய்ச்சல், தலைவலி, சளித் தொல்லை உள்ளவா்கள் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். அறிகுறி உள்ளவா்கள் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொடக்க நிலையிலேயே நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் பெரும்பாலான உயிா் இழப்புகளைத் தவிா்க்கலாம்.

பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது, குப்பைகள் போடுவது போன்ற பழக்கங்களை தவிா்க்க வேண்டும். அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும்.

அடிக்கடி கைகளை சோப்பு போட்டு குறைந்த பட்சம் 20 விநாடிகள் நன்றாகக் கழுவி வேண்டும். கைகளை சுத்திகரிப்பான் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 45 வயது கடந்தவா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவ நிலையங்களில் செலுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com