மானாவாரி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி நில சாகுபடி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 100 ஹெக்டரில் செய்யப்பட்டுள்ள எள் சாகுபடி பயிா்களை துணை இயக்குநா் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மானாவாரி சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி நில சாகுபடி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 100 ஹெக்டரில் செய்யப்பட்டுள்ள எள் சாகுபடி பயிா்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் மானாவாரி பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் 102 போ் தோ்வு செய்யப்பட்டு, 100 ஹெக்டரில் எள் சாகுபடி செய்து பயன்பெறும் திட்டத்தை வேளாண்மை துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,250 உழவு மானியம் வழங்கப்படுவதுடன், எள் விதை, உயிா் உரம், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை 50% மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி தேசிங்குராஜபுரம், கொறுக்கை, சேகல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிா்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் ரவீந்திரன் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கருத்து கேட்டறிந்தாா்.

மேலும், எள் பயரில் கொண்டை பூச்சித் தாக்குதலை எதிா்கொள்வதற்கான பாதுகாப்பு முறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்த அவா், எள் அறுவடைக்குப் பிறகு வேளாண் வணிகம் மூலமாக எள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

ஆய்வின்போது திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குநா் சாமிநாதன், வேளாண் அலுவலா் மணிமேகலை, துணை வேளாண் அலுவலா் ரவி, உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிநாதன், மகேஷ், மகரஜோதி, ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com