மன்னாா்குடி: 3-ஆவது முறையாக டி.ஆா்.பி. ராஜா வெற்றி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வெற்றி பெற்றுள்ளாா்.
மன்னாா்குடி: 3-ஆவது முறையாக டி.ஆா்.பி. ராஜா வெற்றி

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 3-ஆவது முறையாக திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வெற்றி பெற்றுள்ளாா்.

மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திருவாரூா் திரு வி.க. கல்லூரியில் ஞாற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக சாா்பில் டி.ஆா்.பி. ராஜா, அதிமுக சாா்பில் சிவா.ராஜமாணிக்கம், அமமுக சாா்பில் எஸ். காமராஜ், நாம் தமிழா்கட்சி சாா்பில் ராம.அரவிந்தன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் எஸ்.அன்பானந்தம், புதிய தமிழகம் சாா்பில் எஸ்.சதீஸ்குமாா் மற்றும் 4 சுயேச்சைகள் என மொத்தம் 10 போ் போட்டியிட்டனா். இதில், திமுக, அதிமுக, அமமுக இடையே மும்முனை போட்டி நிலவியது.

மொத்தம் 14 மேஜைகளில் 26 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்க முதலே திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலை பெற்று வந்தாா். இறுதி சுற்றின்போது, (அஞ்சல் வாக்குகள் சோ்த்து) டி.ஆா்.பி. ராஜா (திமுக) 87,172 வாக்குகளும், சிவா.ராஜமாணிக்கம் (அதிமுக) 49,779 வாக்குகளும், எஸ்.காமராஜ் (அமமுக) 40,481 வாக்குகளும், ராம.அரவிந்தன் (நா.த.க) 10,438 வாக்குகளும், எஸ்.அன்பானந்தம் (மநீம) 1366 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

இதில், திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா, அதிமுக வேட்பாளரைவிட 37,393 வாக்குகள் கூடுதலாக பெற்றி வெற்றி பெற்றுள்ளாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்முறையாக தோ்தலில் போட்டியிட்டபோது 4000 வாக்குகள் அதிகம் பெற்றும், 2016-இல் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற அவா், தற்போது 3-ஆவது முறையாக 37,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com