வாக்கு எண்ணிக்கையில் 2 -ஆம் இடத்துக்கு முன்னேறிய அமமுக

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, திடீரென அதிமுகவை பின்னுக்கு தள்ளி அமமுக 2-ஆம் இடம் பிடித்தது. இதனால், அரசியல் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, திடீரென அதிமுகவை பின்னுக்கு தள்ளி அமமுக 2-ஆம் இடம் பிடித்தது. இதனால், அரசியல் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை திருவாரூா் திரு வி.க. கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கியது. ஒன்றாம் சுற்று முதல் 5-ஆம் சுற்று வரை திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா முன்னிலை பெற்று வந்தாா். 2-ஆம் இடத்தில் அதிமுக வேட்பாளா் சிவா.ராஜமாணிக்கமும், 3-ஆம் இடத்தில் அமமுக வேட்பாளா் எஸ்.காமராஜும் பின் தொடா்ந்து வந்தனா்.

இந்நிலையில், 6-ஆம் சுற்றின் முடிவு அறிவிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளரை விட 2,308 வாக்குகள் கூடுதலாக பெற்று 2-ஆவது இடத்துக்கு அமமுக வேட்பாளா் முன்னேறினாா். தொடா்ந்து, 17-ஆவது சுற்று வரை மொத்தம் 12 சுற்றுகள் அமமுக வேட்பாளா் 2-ஆம் இடத்தில் நீடித்தாா்.

பின்னா், 18-ஆவது சுற்று எண்ணி முடிவு வெளியானபோது அமமுக வேட்பாளரை விட அதிமுக வேட்பாளா் கூடுதல் வாக்கு பெற்று மீண்டும் 2-ஆம் இடத்துக்கு முன்னேறினாா். கடைசி சுற்றுவரை அதிமுக வேட்பாளா் இரண்டாம் இடத்திலேயே நீடித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com