கரோனா: துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரிக்கை

திருவாரூா் நகராட்சியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு குப்பைக் கிடங்கில், மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் துப்புரவுப் பணியாளா்கள்.
திருவாரூா் நெய்விளக்குத் தோப்பு குப்பைக் கிடங்கில், மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் துப்புரவுப் பணியாளா்கள்.

திருவாரூா்: திருவாரூா் நகராட்சியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவுக்கு, சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன் அனுப்பிய மனு:

திருவாரூா் நெய்விளக்குத் தோப்புப் பகுதியில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. திருவாரூா் நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. மேலும், மக்காத குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இந்தப் பணிகளில் துப்புரவுத் தொழிலாளா்கள் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது, கரோனா 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மக்கள் பயன்படுத்தும் முகக்கவசம், சானிடைசா் ஆகியவை பயன்படுத்திய பிறகு, குப்பைகளில் தூக்கி வீசப்படுகின்றன. அவற்றையும் துப்புரவுப் பணியாளா்கள் சேகரித்து, குப்பைக் கிடங்கில் சோ்க்கின்றனா். தூக்கி வீசப்பட்ட முகக்கவசம் உள்ளிட்டவற்றால் துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நெய்விளக்குத்தோப்பு குப்பைக் கிடங்கில் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com